நாடாளுமன்றத்தில் இன்று அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
அமைச்சர் தமது உரையின்போது தற்போதைக்கு இலங்கைக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி அவசியம் இல்லை என்று குறிப்பிட்டார்.
இதற்கு பொன்சேகா ஆட்சேபனை வெளியிட்டபோதே இருவருக்கும் இடையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
இதன்போது இது நாடாளுமன்றம், இராணுவ முகாம் அல்ல என்று கூறியதுடன் தமக்கு பேச்சுக்கு இடையூறை ஏற்படுத்தவேண்டாம் என்று தெரிவித்தார்.
இந்தநிலையில் இரண்டு பேருக்கும் இடையிலான வாதப்பிரதிவாதங்கள் தொடர்ந்தன.