200 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட உள்ளனர்!இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார்

Report Print Kamel Kamel in பாராளுமன்றம்
75Shares

அரசாங்கத்திற்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்கும் சுமார் 200 ஊடகவியலாளர்களை கைது செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பார்கீர் மார்க்கார் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினை விமர்சனம் செய்து செய்தி அறிக்கையிடும் ஊடகவியலாளர்கள் தொடர்பிலான பட்டியல் ஒன்றை அரசாங்கம் காவல்துறையினரிடம் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான சில ஊடகவியலாளர்கள் கைது செய்பய்பட்டுள்ளதாகவும் அவர் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது இளவயதில் மனித உரிமைகளுக்காக சர்வதேச சமூகம் வரையில் சென்று போராடியவர் எனவும், தற்பொழுது இவ்வாறான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொள்வது ஏற்புடைதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் உள்ளடக்கம் பிரிவிணைவாத அடிப்படையிலானது எனவும், அதிகாரத்தில் நீடிப்பதற்காக இவ்வாறான அணுகுமுறைகளை பின்பற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இவ்வாறான அணுகுமுறைகளினால் நாட்டை முன்னோக்கி நகர்த்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.