சுமந்திரனும், ரணிலும் கல்முனை வடக்கு மக்களை ஏமாற்றினார்கள்!

Report Print Murali Murali in பாராளுமன்றம்
159Shares

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கல்முனை வடக்கு மக்களை ஏமாற்றினார்கள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என்பது அந்த மக்களின் நியாயமான கோரிக்கை. அந்த கோரிக்கை ஏற்கப்பட வேண்டிய ஒன்று.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என கடந்த ஆண்டு பிரதேச செயலகத்திற்கு முன்னாள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது போராட்ட இடத்திற்கு எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் சென்றிருந்தார். ஒரு மாத காலத்திற்குள் பிரச்சினைக்கு தீர்வு காணுவதாக உறுதி வழங்கியிருந்தார்.

இதனை நம்பி அந்த போராட்டம் கைவிடப்பட்டது. எனினும் இறுதியில் அந்த மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது” என அவர் மேலும் கூறியுள்ளார்.