நாளை கூடவுள்ள நாடாளுமன்ற பேரவை

Report Print Steephen Steephen in பாராளுமன்றம்

நாடாளுமன்ற பேரவை நாளைய தினம் மாலை 4 மணிக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

பொலிஸ் மா அதிபர் பதவி மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வெற்றிடமாக இருக்கும் நீதியரசர் பதவிகளுக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச பரிந்துரைத்துள்ள நபர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

கடந்த 19 மாதங்களாகப் பதில் பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றும் சீ.டி.விக்ரமரத்னவை பொலிஸ் மா அதிபராக நியமிக்குமாறு ஜனாதிபதி , நாடாளுமன்ற பேரவைக்குப் பரிந்துரைத்துள்ளார்.

1986ஆம் ஆண்டு முதல் 33 ஆண்டுகளாக பொலிஸ் சேவையில் ஈடுபட்டுள்ள விக்ரமரத்ன, 9 ஆண்டுகளாகத் தேசிய புலனாய்வு சேவையில் கடமையாற்றியுள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தற்பொழுது வரை அவர் பதில் பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.