நாமல் ராஜபக்ச அப்படி இருக்கமாட்டார் என்று நம்புகின்றோம்! நாடாளுமன்றில் கூட்டமைப்பு தெரிவிப்பு

Report Print Murali Murali in பாராளுமன்றம்
887Shares

அமைச்சர் நாமல் ராஜபக்ச இனவாத அடிப்படையில் பேசவோ, செயற்படவோ மாட்டார் என தாம் நம்புவதாக தமிழ் தேசியக் கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“எம்மை பிரிவினைவாதிகளாக பார்க்க வேண்டாம். எமது இனம் சார்ந்து, பிரதேசம் சார்ந்து, எமது மக்கள் சார்ந்து பேசினால் எம்மை இனவாதிகளாக சித்தரிக்கின்றனர்.

எம்மை நாடாளுமன்றில் இருந்து அனுப்ப வேண்டும் என இந்த உயரிய சபையில் கூறுகின்றனர். பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் இவ்வாறு கூறுகின்றனர்.

இது எமக்கு வேடிக்கையாக இருக்கின்றது. எனினும், அமைச்சர் நாமல் ராஜபக்ச அவ்வாறு இருக்கமாடார் என்று நம்புகின்றோம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.