நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளராக குசானி ரோஹனந்திர நியமனம்!

Report Print Murali Murali in பாராளுமன்றம்
90Shares

நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளராக சட்டத்தரணி குசானி ரோஹனந்திர நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற டுவிட்டர் தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அண்மையில் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட முன்னாள் துணை பொதுச்செயலாளர் நீல் இத்தவெலவின் வெற்றிடத்தை நிரப்ப குசானி ரோஹனந்திர நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக தசநாயக்கவின் பரிந்துரைக்கு அமைய வெற்றிடமாக உள்ள பதவிக்கு குசானி ரோஹனந்திரவை நியமிக்க சபாநாயகர் மஹிந்த யாப்ப அபேவர்தன ஒப்புதல் அளித்துள்ளார்.

குசானி ரோஹனந்திர 1999 இல் நாடாளுமன்ற அதிகாரியாக இணைந்துகொண்டார். 2012 முதல் நாடாளுமன்றத்தின் உதவி பொதுச் செயலாளராகவும் (நிர்வாக சேவைகள்) பணியாற்றினார்.

அம்பலாங்கொட தர்மசோக வித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் அறிவியல் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்ட இளங்கலை பட்டம் பெற்றார்.