நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போது வன இலாகா, வன ஜீவராசிகள் திணைக்கள அமைச்சரிடம் முக்கிய கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
இதன்படி,வன இலாகா, வன ஜீவராசிகள் திணைக்கள அமைச்சர் சீ.பீ.ரத்நாயக்க இங்கே இருக்கின்ற போது வன இலாகா தொடர்பான ஒரு சில கருத்துக்களை கூற விரும்புகிறேன்.
அமைச்சரே வன இலாகா திணைக்களம் வட மாகாணத்தில் 44 வீதமான நிலத்தினை தம் வசம் வைத்திருக்கிறது.
ஆகவே இந்த நிலங்கள் ஏற்கனவே நீங்கள் நாடாளுமன்றில் வைத்து வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் உரிய மக்களுக்கு கிடைப்பதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,