அப்போதைய அரசாங்கம் யுத்த நிறுத்தத்தை அறிவித்த போது அதை எதிர்த்தேன்! சரத் பொன்சேகா

Report Print Murali Murali in பாராளுமன்றம்
232Shares

2009 ஜனவரியில் அரசாங்கம் திடீரென அறிவித்த யுத்த நிறுத்தத்தினால் 300 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என முன்னாள் இராணுவதளபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

2009 ஜனவரி 30ம் திகதியும் பெப்ரவரி முதலாம் திகதியும் அப்போதைய அரசாங்கம் யுத்த நிறுத்தத்தை அறிவித்தது.

நான் இதனை எதிர்த்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

அந்த குறுகிய காலப்பகுதிக்குள் பயங்கரவாதிகள் இராணுவத்தினர் மீது தாக்குதலை மேற்கொண்டனர். அந்த மோதல்களில் 300 படையினர் கொல்லப்பட்டனர்.

அத்துடன், படையினர் நான்கு கிலோமீற்றர் தூரம் பின்வாங்கவேண்டிய நிலையேற்பட்டது.

மேலும் மூன்று கிலோமீற்றர் படையினர் பின்வாங்கவேண்டிய நிலையேற்பட்டிருந்தால் யுத்தத்தின் முடிவு வேறு மாதிரியானதாக இருந்திருக்கும்.

இதேவேளை, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக சரத்வீரசேகரவை நியமிக்குமாறு பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய கோட்டாபய ராஜபக்சவை நானே கேட்டுக்கொண்டேன்.

அவர் வேலையில்லாமல் இருந்ததால் இந்த வேண்டுகோளை விடுத்தேன் என சரத்பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.