நாடாளுமன்ற நிலையியற் கட்டளை புத்தகத்தை வீசி எறிந்த நாடாளுமன்ற உறுப்பினரான சாமர சம்பத் திஸாநாயக்க!

Report Print Kamel Kamel in பாராளுமன்றம்
91Shares

நாடாளுமன்ற நிலையியற் கட்டளை புத்தகத்தை ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சாமர சம்பத் திஸாநாயக்க வீசி எறிந்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வுகளின் பங்கேற்றிருந்த போது அவர் இவ்வாறு நிலையியற் கட்டளைகள் அடங்கிய புத்தகத்தை வீசி எறிந்துள்ளார்.

நீதிமன்றம் பற்றிய விடயங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ள நிலையியற் கட்டளை புத்தகத்தை நாங்கள் தயாரிக்கவில்லை. இதனை நீங்களே தயாரித்தீர்கள் என புத்தகத்தை அவர் வீசியுள்ளார்.

இந்த சம்பவம் காரணமாக அவையில் அமளி நிலைமை உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பைபிள் உள்ளிட்ட நூல்களை நாடாளுமன்றில் தூக்கி எறிந்தவர்களுக்கு இந்த நிலையியற் கட்டளை புத்தகத்தை வீசுவது பெரிதல்ல எனவும், இது கல்வித்தகைமை குறித்த பிரச்சினையாகும் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.

முடிந்தால் கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறு அறிக்கையை அவையில் சமர்ப்பிக்குமாறு தாம், சாமர சம்பத்திற்குச் சவால் விடுவதாக அவர் குறிப்பித்துள்ளார்.