ஜனாஸா எரிப்பு விவகாரத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்ப்பை வெளியிடத் தொடங்கியுள்ளது:ஹக்கீம்

Report Print Kamel Kamel in பாராளுமன்றம்
122Shares

கொவிட் தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்யும் விவகாரத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்ப்பை வெளியிடத் தொடங்கியுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

உறவினர்களினால் உரிமை கோரப்படாத சுமார் 20 சடலங்கள் தகனம் செய்யப்பட உள்ளதாக ஆங்கில பத்திரிகையொன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும், இது முஸ்லிம் சமூகத்தின் எதிர்ப்பு நடவடிக்கையாக நோக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறான நிலைமைகள் அரசாங்கத்திற்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த நாட்டுக்கும் நல்லதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த எதேச்சதிகார போக்கிலான செயற்பாடுகள் ஏற்புடைதல்ல எனவும், விஞ்ஞானபூர்வமான ஆதாரங்கள் எதுவுமின்றி ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகளினால் பாரதூரமான விளைவுகள் ஏற்படக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வித தாமதமும் இன்றி ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

சில கடும்போக்குவாத சக்திகளின் தேவைகளுக்காக இவ்வாறு ஜனாஸாக்கள் அடக்கம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொற்று நோயியல் நிபுணர்கள் பலர் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதில் சிக்கல் கிடையாது என கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாஸாக்கள் தகனம் செய்யப்படுவதனால் மிகப் பாரதூரமான அளவில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உளைச்சலுக்கு ஆட்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.