வரவு செலவுத் திட்ட விவாதங்களுக்கு இடையில் நடைபெற்ற ஸ்னுகர் போட்டியில் கயாசான், நலின் ஆகியோர் வெற்றி

Report Print Kamel Kamel in பாராளுமன்றம்
63Shares

வரவு செலவு திட்ட விவாதங்கக்கு இடையில் நடைபெற்ற ஸ்னுகர் சாம்பியன்ஷிப் போட்டியில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயாசான் நவானந்தன ஆகியோர் இணை சாம்பியன்களாக தெரிவாகியுள்ளனர்.

போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச பரிசில்களை வழங்கியிருந்தார்.

இந்தப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் பார்வையிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து இந்த ஸ்னூகர் சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.