நெடுந்தீவு - விஷ்ணு புத்திர வெடியரசன் கோட்டையை பௌத்த விகாரையாக மாற்ற முயற்சி! சிறீதரன் எம்.பி ஆதங்கம்

Report Print Murali Murali in பாராளுமன்றம்
202Shares

நெடுந்தீவு - விஷ்ணு புத்திர வெடியரசன் கோட்டையை பௌத்த விகாரையாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

அண்மையில் அந்த பகுதிக்கு சென்ற தொல்பொருன் திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர், குறித்த இடம் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான இடமென குறிப்பிட்டு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இந்த நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என கோரியதுடன், அந்த பகுதி தமிழர் பாரம்பரிய அடையாளமுடைய இடமென அறிவிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.