நாடாளுமன்றத்தில் பாண் வழங்கப்பட்டமையினால் அதிருப்தி

Report Print Vethu Vethu in பாராளுமன்றம்
312Shares

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அண்மையில் கிடைத்த உணவு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றம் இடம்பெறும் தினங்களில் மாலை 5 மணியளவில் வழங்கப்படும் தேனீர் நேரம் அன்றைய தினம் 6 மணி வரை தாமதப்படுத்தப்பட்டுள்ளது.

பின்னர் பாணுடன் டின் மீன் சம்பல் வழங்கப்பட்டமையினால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் மீன் உட்கொள்ளாதவர்கள் உள்ளமையினால், அவர்களுக்கு பாண் மாத்திரம் உண்ண நேரிட்டுள்ளது.

நாடாளுமன்ற கூட்டம் இரவு 8 மணியாகும் வரை இடம்பெறும் எனினும் பாண் வழங்கப்பட்ட தினம் இரவு 9 வரை நாடாளுமன்ற கூட்டம் இடம்பெற்றுள்ளது. இதனால் நாடாளுமன்ற ஊழியர்கள் 11 மணிவரை பசியோடு இருந்ததாக தெரிவிக்கப்படுன்றது.

நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான பணத்தை வீணடிக்கும் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் அவர்கள் வருத்தமடைந்துள்ளனர்.