தமிழர் பிரச்சினைக்கு சர்வதேசத்தால் தீர்வு தர முடியாது! அமைச்சர் டக்ளஸ்

Report Print Murali Murali in பாராளுமன்றம்
198Shares

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது இலங்கை அரசின் சொந்த ஆர்வத்தில் இருக்கின்றது என அண்மையில் இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“எமது மக்களின் பிரச்சினைகளை முதலில் நாங்கள் தேசியமயப்படுத்த வேண்டும். அதில் நாங்கள் இன்னும் வெற்றிபெறாத நிலையில், அதனை நாங்கள் சர்வதேசமயமாக்கி கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை.

இதனையே நாங்கள் நீண்ட காலம் தெரிவித்து வருகின்றோம். அதற்கான வாய்ப்புகள் இன்னும் நீங்கிவிடவில்லை. அதனை நாங்கள் தென் பகுதிக்கு ஒருங்கிணைத்து உணர்த்த வேண்டும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.