இலங்கை நாடாளுமன்றத்தில் கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
நாலப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் சுகாதார ஆலோசனைக்கு அமைய செயற்படுவது சிரமமாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் செயற்பாடுகளை எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாஸ முழுமையாக நிறைவேற்றுவதாக குமார வெல்கம மேலும் தெரிவித்து்ளார்.