நாடாளுமன்ற செயற்பாடுகள் தொடர்பான குழுவின் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு இன்று இடம்பெறவிருந்த போதும் 18 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற செயலாளர் ஆகியோரின் ஆலோசனைக்கு இணங்க இந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த நாடாளுமன்ற அமர்வுகள் தொடர்பான விடயங்களை அட்டவணைப்படுத்துவதற்காகவே நாடாளுமன்ற செயற்பாடுகள் தொடர்பான குழு இன்று கூடவிருந்தது.