இலங்கையின் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று 463 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் சபாநாயகர் உட்பட்ட 15 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்கியிருந்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜெயசேகர,ரவூப் ஹக்கீம் மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கொரோனா தொற்றுக்கு உள்ளானமையை அடுத்தே இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த பரிசோதனை நடவடிக்கை எதிர்வரும் 15ம் திகதியன்றும் தொடரவிருக்கிறது.