நாடாளுமன்றை மூடுவதற்கு தீர்மானிக்கவில்லை!சபாநாயகர்

Report Print Kamel Kamel in பாராளுமன்றம்
28Shares

நாடாளுமன்றை மூடுவதற்கு எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

வெலிகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொவிட் நோய்த் தொற்று முடியும் வரையில் அரசாங்கப் பணிகளை முடக்கிக் கொண்டிருக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார விதிமுறைகளை பின்பற்றுமாறு நாடாளுமன்ற அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் உள்ளிட்ட மூன்று உறுப்பினர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.