நாடாளுமன்ற பணியாளர்கள் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Report Print Ajith Ajith in பாராளுமன்றம்
21Shares

நாடாளுமன்ற பணியாளர்கள் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு செயலகம் இதனை தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், தயாசிறி ஜெயசேகர மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் சபாநாயகர், நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட்ட 400 நாடாளுமன்ற பணியாளர்கள் மத்தியில் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் முடிவுகளின் அடிப்படையிலேயே 4 பணியாளர்கள் கொரோனா தொற்று உள்ளவர்கள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளனர்.