நாடாளுமன்றம் நாளை மற்றும் நாளை மறுதினம் கூடவுள்ளது

Report Print Ajith Ajith in பாராளுமன்றம்
21Shares

நாடாளுமன்றம் நாளை 19ஆம் திகதி மற்றும் நாளை மறுதினம் 20ஆம் திகதி ஆகிய தினங்களில் கூடவுள்ளது.

கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, ரவூப் ஹக்கீம் மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனைகளின்போது ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் தொற்றுக்கு உள்ளாகவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இந்தநிலையிலேயே நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.