அட்டழுகம போன்று மாறிய நாடாளுமன்றம் - PCR பரிசோதனைகளை நிராகரிக்கும் உறுப்பினர்கள்

Report Print Vethu Vethu in பாராளுமன்றம்
215Shares

நாடாளுமன்ற அமைச்சர் உறுப்பினர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் அதற்கு சிறிய அளவிலானோரே ஈடுபட்டுள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போது, 40க்கும் குறைவானவர்களே அங்கு வருகைத்தந்திருந்ததாக தெரிவிக்கபபடுகின்றது.

கொரோனா பரிசோதனையில் கலந்துக்கொள்ளுமாறு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், பெரும்பாலானோர் கலந்துக்கொள்ளவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக அனைத்து அமைச்சர் உறுப்பினர்களை கொரோனா பரிசோதனைக்குட்படுத்துவது தொடர்பில் நாடாளுமன்ற அதிகாரிகள் மற்றும் சுகாதார பிரிவினருக்கு சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் போது அட்டழுகம பிரதேச பரிசோதனை போன்று உள்ளதாக சுகாதார பிரிவு பேச்சாளர் தெரிவித்துள்ளார்.