நாடாளுமன்றில் 1400 பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை!

Report Print Ajith Ajith in பாராளுமன்றம்
12Shares

நாடாளுமன்றத்தில் இன்று வரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட்ட 1400 பணியாளர்கள் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

நாடாளுமன்ற படைக்களசேவிதர் இதனை தெரிவித்துள்ளார். இன்று மாத்திரம் 190 பேர் கொரோனா சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொரோனா தொற்றால் இறுதியாக பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாபா பண்டார, கடந்த 19ஆம் திகதியும், 21ஆம் திகதியும் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்றதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவருடன் தொடர்புடையவர்களை சீசீடிவி புகைப்பட ஆதாரத்தின் அடிப்படையில் கண்டறியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் படைக்களசேவிதர் தெரிவித்துள்ளார்