சிறையில் மலசலகூடங்களை சுத்தம் செய்யும ரஞ்சன் ராமநாயக்க! - ஹரின் எம்.பி கவலை

Report Print Murali Murali in பாராளுமன்றம்
91Shares

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை சிறையிலுள்ள மலசலகூடங்களை சுத்தம் செய்யவே பணித்துள்ளனர் என எதிர்க்கட்சி உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ரஞ்சன் ராமநாயக்க மிக மோசமாக நடத்தப்படுகின்றார் எனவும், அவருக்கு அரசாங்கம் அநியாயம் செய்கின்றது எனவும் ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தை அவமதித்ததை நாம் நியாயப்படுத்தவில்லை.

அதேபோல் இவர்கள் அனைவரும் கள்ளர்கள் என அவர் கூறினாலும் யார் என நேரடியாக எவரையும் சுட்டிக்காட்டவில்லை.

அதுமட்டுமல்ல எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் சிறையில் அடைக்கப்படுவதை நாம் விரும்பவில்லை.

கொலை செய்திருந்தால், கொள்ளையில் ஈடுபட்டிருந்தால், தவறு செய்திருந்தால் அவர்களை தண்டிக்க வேண்டும். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை

எனவே ரஞ்சன் ராமநாயகவிற்கு நியாயத்தை பெற்றுக்கொடுங்கள். அவரை விடுதலை செய்யவேண்டும் என வலியுறுத்தவில்லை. அவருக்கான நாடாளுமன்ற வாய்ப்பை பெற்றுக்கொடுங்கள்” என தெரிவித்துள்ளார்.