விமல் வீரவன்ச வங்குரோத்து அரசியல்வாதி! ஹரீ ஜயவர்தன

Report Print Samy in அரசியல்
201Shares

விமல் வீரவன்ச என்பவர் வங்குரோத்து அரசியல்வாதி. மூளையே இல்லாத தலை. பெரிய வாய் உள்ளது. அவரைச் சுற்றி இருக்கும் ஊடகவியலாளர்களும் அவரைப் போன்றே. அதனால் இவ்வாறான பொய் அவரது ஊடகங்களில் வெளியிடுகின்றது' என இலங்கையின் பிரபல தொழிலதிபரான ஹரீ ஜயவர்தன இணைய ஊடகம் ஒன்றிடம் கருத்து தெரிவித்தார்.

விமல் வீரவன்சவிற்கு சொந்தமான இணையத்தில் ஹரீ ஜயவர்தன சம்பந்தமாக வெளியிடப்பட்ட செய்திக்கு பதிலளிக்கும் முகமாக அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அந்த செய்தியில் ஹரீ ஜயவர்தன 1990ல் அரச வடிசாலைகள் கூட்டுத்தாபனத்தை பொறுப்பெற்றுக் கொண்ட நாள் தொடக்கம் சுங்க திணைக்களத்திற்கு மோசடி செய்து இதுவரை ரூபா பில்லியன் இல்லை டிரில்லியன் தொகை பெறுமதியான வருவாய் இலங்கை அரசாங்கத்திற்கு இழக்கப்பட்டுள்ளது.

அந்த செய்தியின் இணைப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளதுடன் அந்த செய்தி உண்மையானதா அல்லது தவறானதா என்பது தொடர்பில் ஹெரீ ஜயவர்தன தெரிவித்துள்ளதாவது,

எனக்கு அரச வடிசாலை கூட்டுத்தாபனம் ஜனாதிபதி பிரேமதாச அன்பளிப்பு வழங்கியது. நான் அதை பங்கு சந்தையில் பெற்றுக் கொண்டேன். அன்று முதல் இன்று வரை இலங்கை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிப்பணத்தையும் நிலுவை வைக்காமல் செலுத்தியுள்ளேன்.

இலங்கையில் அதிகளவு வரிப்பணம் செலுத்தும் வியாபாரி நான். எங்களது கிடங்கு தினந்தோறும் இலங்கை சுங்கம் திணைக்களத்தினால் பரிசோதனை செய்யப்படுகின்றது. அவர்கள் எச்சந்தர்ப்பத்திலும் நாங்கள் மோசடி செய்ததாக குற்றம் சுமத்தவில்லை. இந்த வியாபாரத்தை கைப்பற்ற இருப்பவர்கள் பல நபர்கள் இருக்கின்றதனால் நான் மிகவும் கவனமாக வேலை செய்கின்றேன்' என ஹரீ ஜயவர்தன தனது கருத்தை தெரிவித்திருந்தார்.

என் மீது குற்றம் சுமத்தும் விமல் வீரவன்ச மோசடிக்காரர். அவரது மனைவிக்கு இரண்டு கடவுச்சீட்டு இருக்கின்றது. ஒன்றை விமல் வீரவன்சதான் செய்து கொடுத்துள்ளார். அவரது மனைவியே இரகசிய பொலிஸாருக்கு கூறியுள்ளார்.

விமல் வீரவன்விற்கு தேசிய அடையாள அட்டை இரண்டு இருக்கின்றது. வீரவன்ச விமான நிலையத்தில் சிக்கிக் கொண்ட சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தில் உயர் அதிகாரி ஒருவரே காப்பாற்றியுள்ளார்.இல்லையெனில் இன்னும் அவர் உள்ளே தான்.

நாளையோ அல்லது நாளை மறு தினமோ சட்டமா அதிபர் திணைக்களத்தில் வழக்கு தொடரப்பட்டால் அவரது சுயரூபத்தை நாட்டின் அனைவரும் காணக்கூடியதாக இருக்கும் என ஹரீ ஜயவர்தன மேலும் தெரிவித்திருந்தார்.

இணையத்தில் வெளியான செய்தி

இலங்கை வடிசாலை கூட்டுத்தாபனத்தின் உரிமையாளர் ஹரீ ஜயவர்தனவினால் பல ஆண்டு காலமாக நடத்தி வந்த எதனோல் மோசடியை வெளியிடுவதற்கு இலங்கை சுங்க அதிகாரிகள் முன்வந்துள்ளனர்.

சுங்க அதிகாரிகள் தெரிவிக்கும் வகையில் நுட்பமான மோசடி இருபது வருடங்களுக்கும் அதிகமான காலம் தொடக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாதாரணமாக இந்நாட்டிற்கு எதனோல் இறக்குமதி 25000 லீட்டர் டேங்க் (Tankerd). இருப்பினும் வரலாறு முழுவதிலும் இவர்களின் விலைப்பட்டியலினுள் 20000 லீட்டர் தொடக்கம் 22000வரை அளவிலான குறிப்பிடப்பட்டுள்ளது தொடர்பில் சுங்க அதிகாரிகள் சந்தேகத்திற்கு காரணமாக உள்ளது.

இதன் பரிசோதனை சந்தர்ப்பத்தில் இந்த வாரத்திற்கு மட்டும் கொண்டு வரப்பட்ட 10 டாங்கிகளைவிட அதிகமாக அளவினுள் தீர்மானிக்கப்பட்ட 25000 லீட்டர் இருந்ததாகவும், விலைப்பட்டியலில் குறைந்தளவு 20000 லீட்டர் குறைந்து இவை அனைத்தலும் தொகை குறிப்பிடப்பட்டிருந்ததாக சுங்க திணைக்களத்தின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்.......... சம்பவத்திற்கு அழுத்தம் கொடுப்பதாகவும், 250 மில்லியன் பணத்தை அறவிட்டு விடுதலை செய்யுமாறு சுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஹரீ ஜயவர்தனவினால் இந்த பணம் தற்பொழுது செலுத்தப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் மறைப்பதற்கு செயல்பட்டு வருதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இது தொடர்பிலான விசாரணை மொரட்டுவ பல்கலைக்கழக உதவியை பெற்றுக் கொள்வதற்கு சுங்க அதிகாரிகள் ஆலோசனை முன்வைத்துள்ளதுடன் அதற்காக கடும் அழுத்தத்தை அரசாங்க சார்பானவர்கள் கொடுப்பதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அரசாங்கத்திற்கு ஏற்படும் கோடி அளவிலான நஷ்டத்தை 250 மில்லியன் செலுத்தி விடுதலை செய்வது தொடர்பில் சுங்க அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.எதிர்வரும் காலங்களில் கொண்டு வரப்படவுள்ள சுங்க சட்டம் இவ்வாறான செயல்பாடுகளுக்கு இடங்கொடுக்காது என குறிப்பிட்டுள்ளது.

பிரேமதாச ஆட்சி காலத்தில் இந்த வடிசாலை கூட்டுத்தாபனம் 400 கோடி பணத்திற்கு ஹரீ ஜயவர்தனவிற்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட காலம் தொடக்கம் மோசடி இடம்பெற்றிருக்கும் என்பது இவர்களின் கருத்தாகும்.

இந்த சம்பவத்தின் மறைப்பதற்கு அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் முயற்சி செய்வதாக தகவல்கள் குறிப்பிடுவதோடு விசாரணைகள் தற்பொழுது சீதுவையில் உள்ள வடிசாலை கூட்டுத்தாபனத்தினுள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments