இலங்கை தொடர்பில் முறைப்பாடு செய்யும் நோக்கில் நான் தென்கொரியாவுக்கு விஜயம் செய்யவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,
தென் கொரிய விஜயம் மிகவும் வெற்றியளித்துள்ளது.அந்நாட்டு பிரதமருடன் சந்திப்பு நடத்தியிருந்தேன்.
இலங்கையில் முதலீடு செய்யுமாறு தென்கொரிய பிரதமரிடம் விடுத்த கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளது.
அரசாங்கத்தின் தவறுகள் பிழைகள் பற்றி சொல்லவோ குற்றம் சுமத்தவோ நான் தென்கொரியாவுக்கு விஜயம் செய்யவில்லை என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.