மஹிந்த ராஜபக்ச சிங்கள பௌத்த தலைவரா? – சமீர பெரேரா கேள்வி

Report Print Kamel Kamel in அரசியல்
125Shares

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உண்மையாகவே ஓர் சிங்கள பௌத்த தலைவரா என இடதுசாரி கேந்திர நிலையத்தின் அழைப்பாளர் சமீர பெரேரா கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,

அண்மையில் மஹிந்த ராஜபக்ச தென் கொரியாவிற்கு விஜயமொன்றை செய்திருந்தார்.

சிங்கள பௌத்த தலைவர் என தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் மஹிந்த, யாரின் அழைப்பினை ஏற்று இந்த விஜயத்தை மேற்கொண்டார்.அடிப்படைவாத கிறிஸ்தவ அமைப்பு ஒன்றின் அழைப்பிற்கு அமையவே மஹிந்த இந்த தென்கொரிய விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

சிங்கள பௌத்த தலைவர் எனக் கூறிக் கொள்ளும் மஹிந்த அடிப்படைவாத கிறிஸ்தவர்களுடன் இணைந்து செயற்படுகின்றார்.

இன்று எஸ்.பி. திஸாநாயக்க அமைச்சர், பசில் ராபஜக்ஸவின் குற்றச் செயல்களை நியாயப்படுத்த முயற்சிக்கின்றார்.

மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல கூறுகின்றார்.

அன்று செய்த தவறுகளை பாதுகாக்க இந்த அமைச்சர்கள் முயற்சிக்கின்றார்கள்.அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் தொடர்பில் பாரதூரமான பிரச்சினைகள் காணப்படுகின்றன.

நல்லாட்சி என்பது வார்த்தைக்கு மட்டுப்படாமல் செயற்பாடுகளில் அர்ப்பணிப்புடன் ஆட்சி முன்னெடுக்கப்பட வேண்டும்.

அவன் கார்ட் சம்பவம் குறித்த விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.அமைச்சு ஒன்றின் செயலாளர் நாட்டை விட்டு தப்பிச் சென்றமையே இதற்கான காரணமாகும்.

இதற்கு அமைச்சர் ஒருவர் பொறுப்பு சொல்ல வேண்டும்.பல குற்றச்செயல்கள் குறித்த விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக சமீர பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.

Comments