நேர்முகத் தேர்வு கடிதங்களை கிழித்து எறிந்த எவருக்கும் வேட்பு மனு கிடையாது!

Report Print Kamel Kamel in அரசியல்
90Shares

நேர்முகத் தேர்வு குறித்த கடிதங்களை கிழித்து எறிந்த எவருக்கும் வேட்பு மனு வழங்கப்படாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிங்கள பத்திரிகை ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பாளர் தெரிவு செய்யும் நோக்கில் அனுப்பி வைக்கப்பட்ட நேர்முகத் தேர்வு கடிதங்களை சில உறுப்பினர்கள் பகிரங்கமாக கிழித்து எறிந்தனர்.

அவ்வாறு கடிதங்களை கிழித்து எறிந்த எவருக்கும் வேட்பு மனு கிடையாது.ஒழுக்கமில்லா, பண்பில்லா நபர்களுக்கு கட்சியில் வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பம் அளிக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இதன்படி, குருணாகல், களுத்துறை, கம்பஹா உள்ளிட்ட சில மாவட்டங்களின் முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு வேட்பு மனு வழங்கப்படாது.

இவ்வாறான நபர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்காக காலத்தை விரயம் செய்யாது அவர்கள் கட்சியை விட்டு விலகிச் சென்றதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது என துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Comments