அரசாங்கத்தை பாராட்டும் அமெரிக்க அதிகாரிகள்

Report Print Steephen Steephen in அரசியல்
76Shares

காணாமல் போனவர்களை தேடும் செயலகம் ஒன்றை ஸ்தாபிக்கும் சட்டமூலத்தை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றியதை அமெரிக்கா பாராட்டியுள்ளது.

இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நேற்று திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷாப், இலங்கையில் மிகவும் அர்த்தமுள்ள நல்லிணக்க செயற்பாட்டுக்கு, இது வரலாற்று சிறப்புமிக்க வெற்றியென கூறியுள்ளார்.

அதேவேளை தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலும் இது சம்பந்தமாக கருத்து வெளியிட்டுள்ளார்.

சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையானது, உண்மைகளை கண்டறிதல், மற்றும் மறுசீரமைப்பு செயற்பாடுகள் ஆகியவற்றை நல்ல சந்தர்ப்பத்தை நோக்கி கொண்டு செல்வதில் காணப்பட்ட தடையை தாண்டிய நடவடிக்கை என பிஸ்வால் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே நியாயம், மறுசீரமைப்பு மற்றும் பொறுப்புக்கூறலுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் சந்தர்ப்பத்தில் இலங்கை வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையை எடுத்துள்ளதாக கருத முடியும் என ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் டொம் மெலினோஸ்கி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Comments