சிறுபான்மையினருக்காக பாடுபடும் ஜனாதிபதி மற்றும் பிரதமர்

Report Print Thirumal Thirumal in அரசியல்
92Shares

நல்லாட்சி அரசில் ஜனாதிபதியும் பிரதமரும் சிறுபான்மையினர்க்கு அரிய நல்ல பல திட்டங்களை முன்னெடுத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் தமிழ் அமைச்சர்கள் தத்தமது கவனகுறைவினாலும், அவர்களது இயலாமையினாலும் தமிழ் மக்களை பாதுகாக்க முடியாமல் இருந்து வருகின்றனர் என ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டார்.

மேலும், எமது மக்களை பாதுகாப்பதற்கு இ.தொ.கா ஜனாதிபதி பிரதமர் நிதி அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு குறிப்பிட்ட விடயங்களை கொண்டு செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,கொழும்பில் பல வர்த்தக நிலையங்கள் பலவற்றில் சுங்கத்திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இறக்குமதி வரி முறையாக செலுத்தியிருந்த போதிலும் அதிரடி சோதனையின் பின்னரே சீல்வைக்கப்பட்டுள்ளதாக கூற்படுகின்றது.

இதற்கமைய 14க்கு மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன இச்செயற்பாடானது முற்றிலும் அதிர்ப்தியானதாகும்.இவ்வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தனிநபர்க்ள் இல்லை. அவர்களை நம்பி மலையக இளைஞர்கள் பலர், இவ்வர்த்தக நிலையங்களில் தொழில் புரிந்து வருகின்றனர்.

இவ்வர்த்தக நிலையங்களை சீல் வைக்கும் வகையில் அங்கு போதைப் பொருட்களோ, அரசினால் தடைசெய்யப்பட்ட பொருட்களோ இருந்திருக்க வில்லை.இறக்குமதி வரி செலுத்த வில்லை என்று கூறியே சீல் வைக்கப்பட்டிருக்கின்றது ஏற்கனவே கடந்த காலங்களில் மாற்று சமுகத்தை சார்ந்தவர்கள் இறக்குமதி வரி செலுத்தாத காரணத்தினால் அவர்களுக்கு அபராதம் மற்றும் சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டிருந்தன.

ஆனால் தற்போதைய நிலையில் தமிழ் வர்த்தகர்கள் இறக்குமதி வரி செலுத்தவில்லை என்று கூறி, அவர்களுக்குறிய வர்த்தக நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.

இதனால் தமிழர்களுக்குரிய வர்த்தகதுறை முற்று முழுதுமாக முடக்கப்பட்டுள்ளன.ஆனால், தற்போதைய நிலையில் மாற்று இனத்தவர்களினால் ஆக்கிரமிக்கபட்டு வருகின்றன. இந்நிலையானது எமது சமுகத்திற்கு ஆரோக்கியமான சூழலை தோற்றுவிக்காது.

தமிழ் அமைச்சர்களினால்இத்தகைய பிரச்சினைகளை எதிர் நோக்கியிருக்கும் தமிழ் வர்த்தகர்களை பாதுகாக்க தவறுவது மக்கள் மத்தியில் பெறும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்பட்டிருக்கும் இப்பாதிப்பானது குறிப்பிட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மட்டுமல்லாது அவர்களை நம்பியிருக்கும் பெருமளவிலான மலையக மக்களையும் பாதிக்க வைத்துள்ளது.

மேற்படி விடயம் அவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லும் போது அவர்கள் நியாயமான தீர்வை பெற்று கொடுப்பார்கள் என்று இ.தொ.கா. எதிர்பார்கின்றது. என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments