சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதியை அவசரமாக சந்தித்த மைத்திரி,ரணில்

Report Print Steephen Steephen in அரசியல்
89Shares

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி எடேரி கவின்டார்டிஸை நேற்று அவரசமாக சந்தித்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பில் அமைச்சர்கள் சுசில் பிரேமஜயந்த மற்றும் பைஸர் முஸ்தபா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நல்லாட்சி தேசிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், நாட்டில் நிதி ஒழுக்கத்தை ஏற்படுத்துவது குறித்து நாணய நிதியத்தின் வதிவிடப் பிரதிநிதிக்கு தெளிவுப்படுத்துவதே இந்த சந்திப்பின் பிரதான நோக்கம் என ஜனாதிபதி செயலக தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் அரசாங்கத்தின் உயர்மட்டத்துடன் நடந்த இந்த சந்திப்பு மிகவும் முக்கியமான ஒன்றென சர்வதேச நாணய நிதியத்தின் கொழும்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

Comments