காணாமல் போனோர் செயலகம் எவரையும் தண்டிக்காது!- அமைச்சர் மனோ

Report Print Steephen Steephen in அரசியல்
75Shares

காணாமல் போனவர்களை தேடும் தேசிய செயலகத்தின் மூலம் எவருக்கும் தண்டனை வழங்கப்பட மாட்டது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தேசிய உரையாடல் அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த செயலகம் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை தேடி கண்டறியும் எனவும் இது மனக்குறைகளை பரிமாறிக் கொள்வது மாத்திரமே எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு காலத்தில் ஒரு பிரதேசத்தில் நடந்த காணாமல் போன சம்பவங்கள் குறித்து மாத்திரம் இந்த செயலகம் தேடாது.

1988ம், 89ம் ஆண்டுகளில் தெற்கில் நடந்த காணாமல் போன சம்பவங்கள் பற்றியும் தேடி கண்டறியும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comments