ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்ததா வடமாகாண சபை!

Report Print Murali Murali in அரசியல்
505Shares

முன்னாள் போராளிகள் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் ஆதாரங்களை சமர்ப்பித்தால் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல தயாராக இருப்பதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் முன்னாள் போராளிகளின் தொடர் உயிரிழப்புக்கள் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் போராளிகள் 107 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் வடமாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரே தாம் அறிந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டமை குறித்த தகவல்கள் சாட்சியங்களுடன் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், அரசாங்கம் எந்தவித பாரபட்சமுமின்றி நடவடிக்கை எடுக்கும் என வட மாகாண ஆளுநர் ரெஜினோல் குரே தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளிகளின் மரணம் தொடர்பாக வடமாகாண சபையில் கலந்துரையாடப்பட்டுள்ளமையினால் அது ஜனாதிபதியின் கவனத்திற்கு செல்வதற்கும் வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மீள்குடியேற்ற செயலணியில் இடம்பெறுமாறு ஜனாதிபதி அழைத்தபோதும் வடமாகாணசபை அந்த செயலணியில் அதில் பங்கெடுக்கவில்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments