இதுவரைக்காலமும் அமைதியாக இருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தற்போது தமது சதுரங்க ஆட்டத்தினை ஆரம்பித்துள்ளார் என்றே கூறவேண்டும்.
சந்திரிக்கா வட பகுதிக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டுள்ளார். வடபகுதிக்கான இவரின் பயணங்கள் பாரியதொரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கு யாரை முட்டாளாக்குவதற்கு சந்திரிக்கா அம்மையார் முயல்கின்றார், என்பது மட்டும் புரியவில்லை. இவரின் உள்நோக்கம் என்ன?
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்திற்கும் இவருக்கும், நெருங்கிய தொடர்பு உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இதுவரைக்காலமும் அமைதியாக இருந்து வந்த இவர் தற்போது புதிதாக யாழ்ப்பாணத்திற்கும் தமிழ் மக்களுக்கும் நன்மை செய்ய முற்படுகின்றாரா?
மஹிந்த நிலை தடுமாறி சுதந்திரக் கட்சியை தொலைத்து விட்டு, நாட்டின் முன்னாலும், சர்வதேசத்தின் முன்னாலும் குற்றவாளியாக நிற்கும் தருவாயில், சந்திரிக்காவைக் கொண்டு மஹிந்த இலாபம் அடைய முனைகின்றாரா?
இலங்கை வாழ் மூவின மக்களின் ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும், பண்டார நாயக்க குடும்பத்தினருக்கு இருக்கும் கடமைப்பாடு என்ன?
இவ்வாறான கேள்விகளுக்கு பதில் இதோ...