விச ஊசி விவகாரம் கூட்டமைப்பின் கட்டுக்கதை! முன்னாள் போராளி விளக்கம்

Report Print Kamel Kamel in அரசியல்

முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போது விச ஊசி ஏற்றப்படவில்லை என அரசாங்க சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் இதனை உறுதி செய்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட காலத்தில் விச ஊசி ஏற்றப்பட்டதாக செய்யப்படும் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையும் கிடையாது என, புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகளில் ஒருவரான நிமலாநந்தன் என்பவர் கூறியுள்ளார் என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதாகவும், இது குறித்து சர்வதே விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் வட மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிங்கள பத்திரிகையொன்றுக்கு இது குறித்து கருத்து வெளியிட்ட விமலானந்தன். நெலுக்குளம் புனர்வாழ்வு மையத்தில் சுமார் 1300 பேர் தங்கியிருந்தோம்.

உணவு வகைகளை நாமே சமைத்து உண்டோம். வெளியிலிருந்து உணவு கொண்டு வரப்படவில்லை. எம்மைப் போன்றே எம்மை பார்த்துக்கொண்ட படையினரும் நாம் சமைக்கும் உணவையே சாப்பிட்டார்கள்.

நான் 23 மாதங்கள் 20 நாட்கள் புனர்வாழ்வு மையத்தில் தங்கியிருந்தேன். எனினும் இவ்வாறான விச ஊசியோ அல்லது மாத்திரைகளோ வழங்கப்படவில்லை என்பதனை என்னால் பொறுப்புடன் கூற முடியும்.

வடக்கின் சில அரசியல்வாதிகள், அரசியல் நோக்கத்திற்காக பொய்யுரைக்கின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், வடக்கில் இனவாதத்தை விதைக்கும் ஊடகங்களுமே இவ்வாறு பிரச்சாரம் செய்கின்றன.

எனக்குத் தெரிந்த வகையில் அவ்வாறான ஊசி எதுவும் ஏற்றப்படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நல்லிணக்கத்தை விரும்பாத தரப்பினரும் கூறும் இவ்வாறான கட்டுக்கதைகளை மக்கள் நம்பக் கூடாது என விமலானந்தன் தெரிவித்துள்ளார்.

Comments