ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் இலங்கை வருகின்றார்

Report Print Ajith Ajith in அரசியல்

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இந்த மாத இறுதிப்பகுதியில் இலங்கை வரவுள்ளதாக அரசாங்கத்தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே இந்த தகவலை இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஜெனீவாவில் வைத்து இலங்கையின் வெளியுறவு அமைச்சரால் வெளியிடப்பட்டது.

இலங்கையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க நடவடிக்கைகளை ஆய்வு செய்யும் வகையில் இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையிலேயே இந்த விஜயத்துக்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுவதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், இதனை கருத்திற்கொண்டே, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை அரசாங்கம் அவசரமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொண்டதாக நம்பப்படுகின்றது.

Comments