சீனாவில் பல இடங்களுக்கு விஜயம் செய்யும் பிரதமர்

Report Print Kumutha Kumutha in அரசியல்

சீனாவுக்கான 5 நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் உள்ளிட்ட குழுவினர்இன்று சீனாவின் பல வரலாற்று புகழ்மிக்க இடங்களுக்கு விஜயம் செய்துள்ளதாக பிரதமர் வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்கள் இன்று சொங்கிங் நகரில் அமைந்துள்ளபோர்ட் குலோபல் வர்த்தக தொகுதிக்கு விஜயம் செய்துள்ளனர்.

அங்கு இடம்பெறும் வர்த்தக நடவடிக்கைகளை அவதானிப்பதன் பொருட்டு இவர்கள் அங்குசென்றிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அமெரிக்க-சீனா பாசிஸவாத போராட்டம் இடம்பெற்ற ஸ்டீவெல்அருங்காட்சியகத்துக்கும் இவர்கள் விஜயம் சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சீனாவின் முதலாவது பிரதமரின் வீடு மற்றும் அலுவலகத்திற்கும் இவர்களது விஜயம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments