பாதுகாப்பு செயலாளர் பதவி நீக்கம்

Report Print Kumutha Kumutha in அரசியல்

தற்போதைய அரசின் பாதுகாப்பு செயலாளரான கருணாசேன ஹெட்டியாராய்ச்சி பதவி நீக்கம்செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

குறித்த பதவிக்கு சிரேஸ்ட நிர்வாக அதிகாரி ஒருவர் நியமிக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், கடந்தகாலங்களில் பாதுகாப்பு அமைச்சு விமர்சனங்களுக்கு உள்ளாகியிருப்பதால் இந்தமுடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை பாதுகாப்பு செயலாளர் பதவிக்கு நிர்வாக அதிகாரிகள் இருவரின் பெயர்கள்பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments