சபாநாயகர் தேசத்துரோகி

Report Print Kumutha Kumutha in அரசியல்

காணாமல் போனோர் அலுவலகத்தை அமைப்பதற்கான சட்டமூலத்தை நிறைவேற்றிய சபாநாயகர்தேசத்துரோகி என பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டமூலத்துக்கு பாராளுமன்றில் முன்வைக்கப்பட்ட எதிர்ப்புகளைகவனத்திற் கொள்ளாமல் தான்தோன்றி தனமாக சபாநாயகர் செயல்பட்டுள்ளதாகவும் அவர்குற்றஞ்சுமத்தியுள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் நேற்றைய தினம் மிகவும் துரதிஸ்டமான நாள் என்றும்அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தை பழிவாங்கவும், இராணுவத்தினரை தண்டிப்பதற்குமான குறித்த சட்டமூலத்தைஇலங்கையை தவிர வேறு எந்த நாடும் நிறைவேற்றவில்லை என்றும் பாராளுமன்றஉறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.

Comments