இந்திய அமைச்சர் இலங்கைக்கு பயணம்! உடன்படிக்கை எதுவும் இல்லை

Report Print Ajith Ajith in அரசியல்

இந்திய வணிகத்துறை அமைச்சர் நிர்மலா சித்ராமன் இந்த மாத இறுதிக்குள் இலங்கை வரவுள்ளதாக சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த விஜயத்துக்கும் இலங்கை இந்திய பொருளாதார உடன்படிக்கைக்கும் தொடர்பு இல்லை என்று இந்திய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

இதேவேளை எட்கா என்ற இந்த உடன்படிக்கை தொடர்பில் கொழும்பில் இந்திய இலங்கை அதிகாரிகளுக்கு இடையில் கடந்த இரண்டு நாட்களாக கலந்துரையாடல் இடம்பெற்றது.

எனினும் கலந்துரையாடலின் பின்னர் எவ்வித கூட்டறிக்கையும் வெளியிடப்படவில்லை.

Comments