நாடாளுமன்றின் தவணைக் காலத்தை நீடிப்பது குறித்து எவ்வித யோசனையும் நிறைவேற்றப்படவில்லை: பிரதமர்

Report Print Kamel Kamel in அரசியல்

நாடாளுமன்றின் தவணைக் காலத்தை நீடிப்பது குறித்து எவ்வித யோசனையும் நிறைவேற்றப்படவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நாடாளுமன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாடாளுமன்றின் தவணைக் காலத்தை நீடிப்பதற்கு எவ்வித யோசனையும் நிறைவேற்றப்படவில்லை.

19ம் திருத்தச் சட்டத்தினை நிறைவேற்றி நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு இந்த தேசிய அரசாங்கம் அடித்தளமிட்டது.

அதிகாரத்தை பகிர்ந்து ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கூட குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாங்கம் ஒரு அரசியல் கட்சியைக் கொண்டு அமைக்கப்பட்டதல்ல.

ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள் நாடாளுமன்றின் தவணைக் காலத்தை நீடிக்க எவ்வித யோசனையையும் முன்மொழியவில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரங்களை குறைக்குமாறு கோரியிருந்தார். கடந்த அசராங்க ஆட்சிக் காலத்தில் அதிகாரங்களை குறைக்க விரும்பவில்லை.

எனினும் ஜனாதிபதி சுய விருப்பின் அடிப்படையில் அதிகாரங்களை குறைத்துக்கொள்ள விரும்பியிருந்தார்.

அரசியல் அமைப்பு பேரவையின் அதிகாரங்கள் அமுல்படுத்தப்படுகின்றன. நாம் அதிகார மோகத்துடன் செயற்பட்டதில்லை.

ஜனநாயகத்தை நிலைநாட்டவும் அதிகாரத்தை பகிர்ந்தளிக்கவும் நாம் முயற்சிக்கின்றோம்.

நாடாளுன்றின் பதவிக் காலத்தை காலத்தை நீட்டிக்க வேண்டும் என்ற எவ்வித அவசியமும் கிடையாது.

அரசியல் அமைப்பு குறித்த அமைக்கப்பட்டுள்ள குழுக்களே தீர்மானங்களை எடுக்கும் எனவும் அரசாங்கம் இவற்றில் தலையீடு செய்யப் போவதில்லை எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

உத்தேச அரசியல் அமைப்பு யோசனையின் ஊடாக இடைக்கால நியதிகள் அல்லது சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நாடாளுமன்றின் தவணைக் காலத்தை நீட்டிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்தக் கேள்விக்கு பதிலளித்த போதே பிரதமர் மேற்குறிப்பிட்ட விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

Comments