ஜனாதிபதி மைத்திரியை கொலை செய்ய தயாரான ஸ்னைப்பர் குழு! கொழும்பு ஊடகம் பரபரப்பு தகவல்

Report Print Vethu Vethu in அரசியல்

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் போது மருதானையில் இடம்பெற்ற இறுதி பேரணியில் மைத்திரியை கொலை செய்வதற்காக ஸ்னெப்பர் ரக துப்பாக்கிகள் சிலவற்றை, ராஜபக்சர்களினால் இரகசியமாக கொள்கலன்களின் மறைத்து கொண்டு வரப்பட்டதாக ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதனை பரிசோதிக்காமல் நாட்டினுள் விடுவிப்பதற்காக தற்போதைய சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் ஜகத் பிரேமலால் விஜேவீர என்ற பொது சேவை நிர்வாக அதிகாரியும், அப்போதைய சுங்க பிரிவின் ஜெனரலாக செயற்பட்டவரும் அதனுடன் தொடர்புபட்டுள்ளதாக இரகசிய கடிதம் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.

ஜகத் பிரேமலால் விஜேவீர கடந்த ராஜபக்ச ஆட்சியின் போது சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக மஹிந்த ராஜபக்சவினால் 2013ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ராஜபக்சர்கள் அதிகாரத்தில் இருந்து நீங்கும் வரையில் அவர் அந்த பதவியில் செயற்பட்டுள்ளார்.

அந்த காலப்பகுதியினுள் நாமல் ராஜபக்ச, யோஷித ராஜபக்ச ஆகியோரின் பெயரில் கொண்டு வரப்பட்ட கொள்கலன்களை எவ்விதமான சோதனையிடாமலும், கொள்கலன்களை திறந்தேனும் பார்க்காமல் துறைமுகத்தில் இருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளன.

அதற்கு தொடர்புடைய அதிகாரிகளுக்கு அந்த கொள்கலன்களை விடுவிக்குமாறு அச்சுறுத்தும் வகையிலான உத்தரவுகளை ஜகத் பிரேமலால் விஜேவீர விடுத்துள்ளார்.

அத்துடன் மோட்டார் பந்தயங்களுக்கு என கூறி எவ்விதமான வரிக்கட்டணங்களும் அறவிடாமல் லெம்போகி போன்ற அதிக திறன் கொண்ட என்ஜின்களுடனான ரேஸிங் கார்களும் இந்த நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன் நிலையில், அவை ஜகத் பீ.விஜேவீரவின் நேரடி உத்தரவில் விடுவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு நாட்டிக்குள் விடுவிக்கப்பட்ட ரேஸிங் கார்களுக்கு இன்று என்ன நடந்ததென்பது மர்மமாகவே உள்ளன.

குறித்த ஸ்னைபர் துப்பாக்கிகளும் அவ்வாறே நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மைத்திரியை கொலை செய்வதற்காக பயன்படுத்தவிருந்த துப்பாக்கிகள் ஒரு போதும் பாதுகாப்பு படையினரிடம் இருந்து அல்லது விடுதலை புலிகளிடம் இருந்து கைப்பற்றியதாக இருக்க கூடாதென திட்டமிடுபவர்களின் உத்தரவிற்கமைய இவ்வாறு நவீன ஸ்னைபர் துப்பாக்கி கொண்டு வரப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் திட்டம் தோல்வியடைந்த போதிலும் கொண்டுவரப்பட்ட துப்பாக்கி நாட்டில் ஏதோ ஒரு இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. சோதனையிடாமல் கொள்கலன்களை விடுவிக்கும் அரச அதிகாரியான ஜகத் பீ. விஜேவீர தற்போது அமைதியாக உள்ளார்.

இவ்வாறான பாரிய குற்றச்சாட்டுடைய அதிகாரி ஒருவர் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளராக இருப்பது எவ்வாறு என குறித்த இரகசிய கடிதம் மூலம் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.


You may like this video

Latest Offers

loading...

Comments