காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது அவசியம்!

Report Print Kumutha Kumutha in அரசியல்

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு போன்றவற்றிற்கு முதலிடம் கிடைக்கும் என அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை துறைமுகங்கள் அதிகாரசபை அதிகாரிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

தான் கடந்த வாரம் யாழ்ப்பாணம் சென்ற போது காங்கேசன்துறை துறைமுகத்திற்கு சென்று அங்கு காணப்பட்ட பல குறைபாடுகள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடிவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், துறைமுகத்தின் தற்போதைய நிலை தொடர்பில் கடற்படை தளபதி ரியர் அட்மிரல் பியல் த சில்வா அமைச்சரிடம் தெளிவுபடுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தற்போது இந்தியாவில் இருந்து கொண்டுவரப்படும் போதைப் பொருட்களை தடுக்கும் மையமாக காங்கேசன்துறை முக்கிய இடம் வகிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியினூடாகவே போதை உள்ளிட்ட பொருட்கள் எமது நாட்டிற்குள் கொண்டுவரப்படுவதாகவும், எனவே துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் போது மிகவும் கவனமாக செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அவர் தற்போது வட இந்தியாவில் துறைமுகங்கள் அமைப்பதற்கு இந்திய அரசால் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும்,அதற்கமைய கூட்டு முயற்சியாக நாம் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது அவசியம் என்றும் அர்ஜுண ரணதுங்க கூறியுள்ளார்.

இதேவேளை, இதற்கு கடற்படையின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...

Comments