மலேசிய தாக்குதல் சம்பவத்தின் உண்மையான பின்னணி என்ன?

Report Print Vethu Vethu in அரசியல்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மலேசியாவில் வைத்து அந்நாட்டுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்ஸார் மற்றும் அவருக்கு இரண்டாவது நபரான மஜிந்த ஜயசிங்க தாக்குதலுக்கு உள்ளானர்கள்.

இந்த தாக்குதல் சம்பவம் இலங்கையர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளின்படி, இலங்கை தரப்பில் ராஜபக்சர்களின் பிரபல சூழ்ச்சிக்காரராக வழக்கறிஞர் ஒருவர் செயற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த வழக்கறிஞர் தீவிரவாதிகள் மற்றும் அரசியல் வன்முறைகள் குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு அடையாளப்படுத்துவதற்கும் தமிழர்கள் மற்றும் ராஜபக்சர்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்குமே செயற்பட்டுள்ளார்.

இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், உதவித்தொகையின் ஊடாக வெளிநாடுளில் தனது கற்கை நெறிகளை மேற்கொண்டுள்ளார். பின்னர் தமிழ் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான ஊடக நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்டுள்ள நிலையில், ராஜபக்ச ஆட்சியின் புலனாய்வாளராக செயற்பட்டுள்ளார். அப்போதைய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து அக்கட்சியின் பொது செயலாளரை ஜனாதிபதி தேர்தலின் போது ராஜபக்சர்களுடன் இணையவதற்கு இடைத்தரகராக செயற்பட்டவரும் இவராகும்.

மலேசியாவின் தீவிரவாத ஒப்பந்தத்திற்காக பணம் செலுத்தியவர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில் இதுவரையில் சரியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர்களின் தொடர்பு குறித்து ஆராயும் போது இலங்கையின் இடைத்தரகராக குறித்த வழக்கறிஞர் செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65வது ஆண்டு மாநாடு வெற்றியடையும் என்பதனை நன்கு அறிந்திருந்த ராஜபக்ஷ ரெஜிமென்ட், தமக்கு ஏற்படும் சாதகமற்ற தன்மையை கடப்பதற்காக தமிழர்களின் எதிர்ப்பினை தூண்டிவிட்டு அதன் நன்மையை பெற்றுக்கொள்வதற்கான திட்டங்களை வகுத்துள்ளனர். அதன் பின்னரே மஹிந்த மலேசியா நோக்கி சென்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

மலேசியாவில் இடம்பெற்ற கட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினராக பிரதிநிதித்துவப்படுத்தாமை பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மஹிந்த அங்கு தினேஷ் குணவர்தனவின் மக்கள் ஐக்கிய முன்னணி உறுப்பினராகவே கலந்துக் கொண்டுள்ளார். மஹிந்த ராஜபக்ச மக்கள் ஐக்கிய முன்னணியின் உறுப்பினராக அந்த நாட்டு அதிகாரிகளிடம் காட்டிக் கொண்டது ஏன்?

ராஜபக்ச தரப்பினரான தாக்குதலுக்குள்ளான அன்ஸாரின் செயற்பாடு பாரிய வகையில் சந்தேகத்தை ஏற்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டங்களை கண்டதன் பின்னரும், மாலை வேலை மீண்டும் விமான நிலையத்தில் செல்ல வேண்டும் என்பதனை அறிந்தும் அவர் பாதுகாப்பு கோரி மலேசிய பாதுகாப்பு பிரிவிடம் அறிவிக்காமை இந்த சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது.

பொதுவாக எந்தவொரு அரச அதிகாரியும் தான் மற்றும் தனது நபர்களின் பாதுகாப்பிற்கு மேற்கொள்ள வேண்டிய இந்த சாதாரண நடவடிக்கையினை அன்ஸார் மேற்கொள்ளாமையும், பின்னர் அங்கு ஆர்ப்பாட்டக்காரர்களை கோபப்படுத்தும் வகையில் செயற்பட்டதும் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகள் அவதானம் செலுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Latest Offers

loading...

Comments