ரணிலின் கூற்றுக்கு சீமான் மறுப்பு!

Report Print Ramya in அரசியல்

மலேசியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் அண்மையில் தாக்கப்பட்டமைக்கு ”நாம் தமிழர் கட்சியே” காரணம் என கூறியமைக்கு ”நாம் தமிழர் கட்சி”யின் நிறுவனரான சீமான் மறுப்பு தெரிவித்துள்ளார்.

உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்டமைக்கு இலங்கையில் இருந்த தமிழர்கள் காரணம் அல்ல, இந்தியாவில் உள்ள நாம் தமிழர் கட்சியே என கடந்த செவ்வாய் கிழமை இடம் பெற்ற நாடாளுமன்ற ஒன்று கூடலின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.

இந்த தாக்குதலை நடத்தியது புலிகளின் முன்னாள் உறுப்பினர்களே என இலங்கையில் உள்ள பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஆனால், தென் இந்தியாவில் உள்ள அரசியல் குழுக்களே இந்த தாக்குதலை நடத்தியது என இலங்கையின் பிரதமர் செவ்வாய்கிழமை கூறியிருந்தார் என சீமான் தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரதமர் பல முறை இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார். ஆனால் அவருடைய விஜயத்தில் எந்த இடையூறுகளையும் நாம் ஏற்படுத்தவே இல்லை என சீமான் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் அரசியலில் உள்ளவர்கள் எப்போதும் எங்களால் எதிர்ப்பை காட்டமுடியும் என்றும் சீமான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

அண்மையில் மலேசியாவில் இடம் பெற்ற அரசியல் கட்சி மாநாட்டில் மகிந்த கலந்து கொண்ட போது அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்ருந்தன.

இதேவேளை, மலேசியாவில் இடம் பெற்ற அரசியல் கட்சி மாநாட்டில் இந்தியாவில் உள்ள பிரதிநிதிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...

Comments