சிறந்த பொருளாதார திட்டம் வகுக்கப்படும்: நிதி ராஜாங்க அமைச்சர்

Report Print Steephen Steephen in அரசியல்

பொருளாதார திட்டங்களை ஆய்வு செய்து. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து நாட்டை அபிவிருத்தி செய்ய சிறந்த பொருளாதார கொள்கை உருவாக்கப்படும் என நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி 10 ஆண்டுக்கான பொருளாதார கொள்கை ஒன்றை உருவாக்கியுள்ளது.

இதேபோன்ற பொருளாதார கொள்கை ஒன்றை உருவாக்குமாறு ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனடிப்படையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி ஆகியவற்றின் பொருளாதார கொள்கைகளை ஆராய்ந்து அரச நிறுவனங்களை விற்பனை செய்யாத சிறந்த பொருளாதார கொள்கை ஒன்று அடுத்த 10 ஆண்டுகளுக்கு செயற்படுத்தப்படும்.

மேலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி தொடர்ந்தும் இருந்து வருகிறார்.

இதனடிப்படையில், 20வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற ஆதரவு வழங்குமாறு கூட்டு எதிர்க்கட்சியினரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை துரிதமாக நடத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இன்னும் 6 மாவட்டங்களில் எல்லை நிர்ணயப் பணிகள் முடிவடைந்ததும் தேர்தல் நடத்தப்படும் எனவும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...

Comments