லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் கைது செய்யப்படப்போகும் முன்னாள் பொலிஸ் மா அதிபர்கள்

Report Print Steephen Steephen in அரசியல்

கொலை செய்யப்பட்ட சன்டேலீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை சம்பவம் தொடர்பான விசாரணைகளை வேண்டும் என்றே குழப்பி, சந்தேக நபர்களை விடுவித்தமை தொடர்பாக இரண்டு முன்னாள் பொலிஸ் மா அதிபர்கள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் பொலிஸ் மா அதிபர்களான ஜயந்த விக்ரமரத்ன மற்றும் மகிந்த பாலசூரிய ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது,

லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்படும் முன்னர், அவரது வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற அரச வாகனத்தின் இலக்கத்தை லசந்த வலது கையில் எழுதிய அவரது தனிப்பட்ட குறிப்பேட்டை தொலைத்ததாக ஜயந்த விக்ரமரத்னவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரான மலிக் சமரவிக்ரமமே வாகனத்தின் இலக்கத்தை குறித்து கொள்ளுமாறு லசந்தவுக்கு அப்போது கூறியுள்ளார்.

இந்த குறிப்பேடு இறுதியாக கல்கிஸ்சை பொலிஸ் தலைமையகத்தின் பொறுப்பதிகாரியின் மேசையில் இருந்துள்ளது. இதற்கான புகைப்பட ஆதாரங்கள் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் உள்ளன.

புகைப்படத்தை பெரிதாக்கி, வாகன இலக்கத்தை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இந்த குறிப்பேடு தற்போது காணாமல் போயுள்ளது.

காணாமல் போயுள்ள குறிப்பேடு கல்கிஸ்சை பொலிஸ் நிலையத்தில் இருந்து, மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கும், அங்கிருந்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்னவின் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறித்த முழுமையான விபரங்களை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கண்டறிந்துள்ளனர்.

அங்கு கொண்டு சென்ற குறிப்பேடு தற்போது காணாமல் போயுள்ளது. இதனடிப்படையிலேயே ஜயந்த விக்ரமரத்னவுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் இருந்து பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு மாற்றியதாக முன்னாள் பொலிஸ் அதிபர் மகிந்த பாலசூரிய மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அன்றைய பணிப்பாளராக இருந்த சீ.என். வாகிஸ்ட மூலம் கைது செய்யப்பட்டவர்களை மகிந்த பாலசூரிய விடுதலை செய்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Latest Offers

loading...

Comments