ராஜித கூறுவது பொய்! வாகனம் சட்ட ரீதியானது என்கிறார் நாமல்

Report Print Murali Murali in அரசியல்

நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவினால் கைப்பற்றப்பட்ட தனது வாகனம் சட்ட ரீதியானது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குறித்த வாகனமானது, 50 ஆயிரம் டொலரைக் கொடுத்தே கொள்வனவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த வாகனத்தை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அரசினால் வழங்கப்படும் வரி விலக்கு வாகன அனுமதிப் பத்திரத்துக்கு கொள்வனவு செய்ய முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், குறித்த வாகனம் பெறுமதி கூடிய ஒன்று என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ள கருத்தில் எந்தவித உண்மையும் இல்லை எனவும் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, குறித்த வாகனம் வரிச் சட்டங்கள் எதனையும் மீறி, கொண்டுவரப்பட்ட ஒன்று அல்ல என குறிப்பிட்டுள்ள அவர், தாம் 6 வருடங்கள் குறித்த வாகனத்தை பயன்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...

Comments