ஐ.தே.க ஆண்டு நிறைவில் பங்கேற்பேன் - துமிந்த திஸாநாயக்க

Report Print Kamel Kamel in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்கேற்கப் போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்கேற்குமாறு அந்த கட்சியின் பொதுச் செயலாளர் கபிர் ஹாசீம் அழைப்பு விடுத்துள்ளார் எனவும் துமிந்த தெரிவித்துள்ளார்.

இந்த அழைப்பினை நிராகரிப்பதற்கு எந்தவிதமான காரணமும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கீழ் மட்ட சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் இன்னமும் கட்சியை விட்டு விலகவில்லை என்பது குருணாகலில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் ஆண்டு நிறைவு நிகழ்வின் போது தெளிவாகியது என தெரிவித்துள்ளார்.

மக்கள் பலம் இன்னமும் அதிகரித்துள்ளது என்பதனை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும், முழு உலகிற்கும் அறிவிக்கும் சந்தர்ப்பமாக குருணாகல் நிகழ்வினை குறிப்பிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...

Comments