புதிய கட்சி அமைப்பது குறித்து கூட்டு எதிர்க்கட்சி ஆறு கட்சிகளுடன் பேச்சு!

Report Print Kamel Kamel in அரசியல்

புதிய கட்சி ஒன்றை அமைப்பது தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சி ஆறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

புதிய அரசியல் கட்சியொன்று அமைக்கப்பட்டால் அதற்கான ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளும் நோக்கில் கடந்த வாரம் ஆறு அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

புதிய அரசியல் கட்சியொன்று உருவாக்கப்பட்டால் ஆதரவளிக்கத் தயார் என இந்த ஆறு கட்சிகளினதும் தலைவர்கள் உறுதியளித்திருந்தனர் என கூட்டு எதிர்க்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து கூட்டு எதிர்க்கட்சி விரைவில் ஊடகங்களிடம் தெளிவுபடுத்தவுள்ளது.

Latest Offers

loading...

Comments