ரணிலுடன் கறுப்பு கோப்பி அருந்திய டலஸ், கம்மன்பில! பின்னணி என்ன?

Report Print Vethu Vethu in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்பை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உதய கம்மன்பில, டலஸ் அலகபெரும உட்பட உறுப்பினர்கள் சிலர், அண்மையில் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பிரதமரின் உத்தியோகபூர்வ அறையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சந்திப்பின் போது ரணில் விக்ரமசிங்கவினால் உதய கம்மன்பில, டலஸ் அலகபெரும உட்பட சிலருக்கு கறுப்பு கோப்பி விருந்து ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அப்போதைய எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இவ்வாறான சந்திப்பு இடம்பெற்றது. அப்போதும் இது போன்று கறுப்பு கோப்பி விருந்து வழங்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களில் அதிக பேசப்பட்ட ஒரு விடயமாகியிருந்தன.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் தேவைக்கு அமைய மஹிந்த தரப்பு செயற்படுவதாக அரசியல் ரீதியாக பெரிதும் பேசப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இவ்வாறான சந்திப்புகள் இடம்பெறுவதாக அரசியல் விமர்சர்கள் தெரிவித்துள்ளனர்.

Latest Offers

loading...

Comments